தரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம், மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் விரிவான விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், எங்கள் தயாரிப்புகள் உயர்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்வதுடன், தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்கிறோம்.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் TNSC, நவீன தொழில்நுட்பங்களையும் பாரம்பரிய முறைகளையும் ஒருங்கிணைத்து, தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சமூகத்தின் நல்வாழ்விற்கும் பங்களித்து வருகிறது.
படிக அயோடின் உப்பு என்பது பெரிய, பளபளப்பான உப்புப் படிகங்களையும் இயற்கையான தூய்மையையும் கொண்ட உயர்தர உப்புப் பொருளாகும்.
கவனமாக மேற்கொள்ளப்படும் ஆவியாதல் செயல்முறையின் மூலம் இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. இதனால் உப்புப் படிகங்கள் இயற்கையாக உருவாகி, அவற்றில் உள்ள இயல்பான கனிமச் சத்துகளைத் தக்கவைத்துக் கொள்கின்றன.
அயோடின் செறிவூட்டப்பட்டுள்ளதால், இவ்வுப்பு அத்தியாவசிய ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. அயோடின் குறைபாட்டைத் தடுக்க இது உதவுகிறது. அயோடின் குறைபாடு தைராய்டு சுரப்பி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.
பெரிய உப்புப் படிகங்களைக் கொண்டிருப்பதால், சமையலிலும் உணவுகளின் இறுதிச் சுவையை மேம்படுத்துவதிலும் படிக அயோடின் உப்பு சிறந்த தேர்வாக விளங்குகிறது. இது உணவிற்கு சிறந்த சுவையையும் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது.
அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற இவ்வுப்பு, உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேண உதவுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட அயோடின் உப்பு என்பது உயர்ந்த தூய்மையையும் எளிதான பயன்பாட்டையும் வழங்கும் வகையில் நுணுக்கமாகப் பதப்படுத்தப்படும் உப்புப் பொருளாகும்.
சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் தேவையற்ற அசுத்தங்கள் நீக்கப்பட்டு, உப்பிற்கு நுண்ணிய மற்றும் சீரான தன்மை அளிக்கப்படுகிறது. இதனால் உணவுகளில் தேவையான அளவில் உப்பைச் சேர்ப்பதற்கும் சமையலுக்கும் இது மிகவும் ஏற்றதாக அமைகிறது.
பின்னர், தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் அயோடின் குறைபாட்டைத் தடுக்கவும் முக்கியப் பங்கு வகிக்கும் அயோடின் இதில் செறிவூட்டப்படுகிறது.
இவ்வுப்பு அதன் தூய்மையான, நடுநிலையான சுவைக்காக அறியப்படுகிறது. உணவின் இயல்பான சுவையை மாற்றாமல், அதன் சுவையை மேம்படுத்துகிறது.
உயர்தர மூலப்பொருட்கள் அவசியமான தொழில்முறை சமையலறைகள் மற்றும் வீட்டு சமையல் ஆகிய இரண்டிற்கும் இது ஏற்றதாகும். உணவிற்குச் சுவையூட்டுதல், சமையலில் பயன்படுத்துதல் அல்லது மேசை உப்பாகப் பயன்படுத்துதல் எனப் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற வகையில், சீரான தரத்தையும் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
இவ்வுப்பில் அயோடின் மற்றும் இரும்புச்சத்து ஆகிய இரண்டும் சிறப்புச் செறிவூட்டல் முறையின் மூலம் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
அயோடின், தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்கவும் முன்கழுத்துக் கழலை (Goitre) ஏற்படுவதைத் தடுக்கவும் முக்கியமானது. அதேபோல், இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமானதாகும். மேலும், இரத்தச்சோகை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உப்பு முழுவதும் சீராகக் கலந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் செறிவூட்டல் செயல்முறை கவனமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தேவையான கனிமச் சத்துகள் சீரான அளவில் கிடைக்க உதவுகிறது.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறப்பான ஊட்டச்சத்துத் தேவைகள் கொண்டவர்களுக்கு இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பு பயனுள்ளதாக அமைகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்த உதவும் சிறந்த தேர்வாக இது விளங்குகிறது.